search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்கர் மக்களவை தொகுதி"

    மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மக்களவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவின் பணபலத்தை காங்கிரசின் மக்கள் பலம் தோற்கடிக்கும் என மாநில தலைவர் அசோக் தவான் சவால் விடுத்துள்ளார். #PalgharBypoll #AshokChavan
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், வங்காவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான அசோக் சவான் பேசியதாவது:

    மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக பால்கர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிகாரம் மற்றும் பணத்தை நம்பியுள்ளது. ஆனால், மக்கள் சக்தி அவர்களின் பண சக்தியை நிச்சயம் தோற்கடித்து விடும்.

    தோல்வி ஏற்படும் என்ற பயத்தாலேயே மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலரை பாஜக பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.

    மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை ஆட்சியில் உள்ள பாஜக நிறைவேற்றவில்லை. இதற்காக, பிரதமர் மோடியும், தேவேந்திர பட்னாவிசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். #PalgharBypoll #AshokChavan
    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் பாஜக முதுகில் குத்திவிட்டது என உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், விரார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை சேர்ந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று பேசியதாவது:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் இந்துத்துவா பாதையில் இருந்து திசைமாறி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியால் தான்  வளர்ச்சி சாத்தியமாகும்.

    எங்கள் கட்சி விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. பாஜக அதன் கூட்டணி கட்சியால் முதுகில் குத்தப்பட்டு வருகிறது. இதை காணும் ண்டால் பால் தாக்கரே ஆன்மா மிகவும் வருந்தும், துக்கப்படும்,

    பால்கர் தொகுதியில் பாஜகவினர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    மகாராஷ்டிரா மாநில மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் பெறும் வெற்றி மூலம் நிலையான ஆட்சி கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைவது உறுதி என தெரிவித்தார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து இங்கு திரும்பி வருகிறார் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். #PalgharBypoll #UddhavThackeray #PMModi,
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், வசாய் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

    நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் எனக்கூறி பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு சென்று விடுகிறார். அவர் இங்கு நடைபெறும் தேர்தல்களுக்காக மட்டுமே திரும்பி வருகிறார். தேர்தல்கள் முடிந்ததும் மீண்டும் வெளிநாடு சென்று விடுகிறார்.



    இங்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்துள்ள உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திடம், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் உங்கள் சொந்த தொகுதியில் தோற்றுப் போனதை அவரிடம் யாராவது எடுத்துக் கூறினால் நல்லது என தெரிவித்தார். #PalgharBypoll #UddhavThackeray #PMModi,
    ×